லைஃப்ஸ்டைல்

அழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியின் பங்கு

Published On 2019-02-07 03:16 GMT   |   Update On 2019-02-07 03:16 GMT
பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம்.
பொதுவாக பெட்ரோலியம் ஜெல்லியானது அனைவரது வீட்டிலுமே இருக்கும். இத்தகைய பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பெட்ரோலியம் ஜெல்லியை பலவாறு பயன்படுத்தலாம். அதிலும் சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம். இங்கு அழகைப் பராமரிக்கும் போது பெட்ரோலியம் ஜெல்லியை எதற்கெல்லாம், எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லி இருந்தால் தவறாமல் பயன்படுத்தி, அதன் நன்மையைப் பெறுங்கள்.

தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை இரவில் படுக்கும் போது கண் இமைகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து வாருங்கள். இதனால் கண் இமைகள் நீளமாக வளர்வதோடு, நன்கு அடர்த்தியாகவும் இருக்கும்.

சிலருக்கு கூந்தல் வறண்டு அசிங்கமாக காணப்படும். அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை சிறிது எடுத்து கூந்தலின் மேல் தடவினால், கூந்தலானது அடங்கி, வறட்சியில்லாமல் காணப்படும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பது போல் வெளிப்படுத்தும்.

வியர்வை நாற்றம் வராமல் இருக்க, அனைவரும் நிச்சயம் டியோடரண்ட் பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் போது, அதில் இருக்கும் நறுமணம் உடலில் நாள் முழுவதும் இருக்க வேண்டுமானால், டியோடரண்ட் அடிக்கும் முன்பு, அதனை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் நறுமணம் நாள் முழுவதும் இருக்கும்.

கூந்தலுக்கு ஹேர் டை அடிக்கும் முன், கூந்தல் படும் இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொண்டால், ஹேர் டையினால் சருமத்தில் ஏற்படும் கறைகளைத் தடுக்கலாம்.

கன்னங்களின் மீது பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவினால், அது கன்னங்களை அழகாக ஹை லைட் செய்து காண்பிக்கும். அதேப் போல் இதனை கண்களுக்கு மேக் அப் போடும் முன், கண் இமைகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி, பின் ஐ ஷேடோவைப் பயன்படுத்தினால், கண்கள் அழகாக காணப்படும்.

உதடுகள் அடிக்கடி வறட்சி அடைந்தால், அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்கு தடவிக் கொண்டால், நீண்ட நேரம் உதடுகள் ஈரப்பசையுடன் இருக்கும்.
Tags:    

Similar News