லைஃப்ஸ்டைல்

பெண்கள் விரும்பும் பிபி கிரீம் - சிசி கிரீம்

Published On 2019-01-23 05:00 GMT   |   Update On 2019-01-23 05:00 GMT
இன்று பலர் ஃபேர்னெஸ் கிரீமுக்குப் பதில் பிபி அல்லது சிசி கிரீம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் இந்த கிரீம்களையே வைத்திருக்கிறார்கள்.
இன்று பலர் ஃபேர்னெஸ் கிரீமுக்குப் பதில் பிபி அல்லது சிசி கிரீம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் இந்த கிரீம்களையே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் சருமத்தன்மையைப் பொறுத்து இந்த இரண்டு கிரீம்களில் பொருத்தமானது எது எனத் தேர்வு செய்வது அவசியம்.

இதோ உங்கள் புரிதலுக்காக…

பிபி கிரீம் (PP Cream)

* இயற்கையாகவே ஆரோக்கியத்துடன் இருப்பதைப்போல சருமத்தைப் பொலிவாகக் காட்டும்.
* ‘திக்’கான கிரீம் போன்ற தன்மையுடையது.
* சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கும் மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தின் சுருக்கங்கள், மேடு பள்ளங்களைத் தற்காலிகமாக மறைத்து ஒரே சீராகக் காட்டக்கூடிய ‘பிரைமர்’ என இரண்டின் வேலைகளையும் செய்கிறது.
* ‘நோ மேக்கப்’ போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
* சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கிறது. பொலிவான சருமம் போன்ற தோற்றத்தைத் தருவதுடன் மற்றும் சருமத்தைப் பாதிப்படையாமலும் பாதுகாக்கிறது.



சிசி கிரீம் (CC Cream)

* சருமத்துக்கு மேக்கப் போட்டது போன்ற தோற்றத்தைத் தரும்.
* ‘லைட்’டான லோஷன் போன்ற தன்மையுடையது.
* சருமத்துக்கு ஈரப்பதத்தை தரும் மாய்ஸ்சரைசர், சருமத்தின் சுருக்கங்கள், மேடு பள்ளங்களைத் தற்காலிகமாக மறைத்து ஒரே சீராகக் காட்டக்கூடிய ‘பிரைமர்’ என இரண்டின் வேலைகளையும் செய்கிறது.
* முகப்பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், வடுக்கள், கரும் திட்டுகள் என அனைத்தையும் மறைத்து, சருமத்தை ஒரே சீரான நிறத்துடன், மென்மையாகக் காட்டுகிறது. சருமத்தின் குறைகளைத் தற்காலிகமாக மறைப்பதுடன், தொடர்ந்து பயன்படுத்திவரும் நிலையில் அவற்றை நிரந்தரமாகச் சரிசெய்யும் வேலையையும் செய்கிறது.
* சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. மேக்கப் போட்டது போன்ற தோற்றம் அளிப்பதுடன், சருமத்தின் குறைகளைச் சரி செய்து, மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
 
Tags:    

Similar News