லைஃப்ஸ்டைல்

சூப்பரான பச்சைப் பட்டாணி மசாலா

Published On 2019-04-04 06:43 GMT   |   Update On 2019-04-04 06:43 GMT
சூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பச்சைப் பட்டாணி மசாலா. இன்று இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கவும்.
தேவையான பொருட்கள் :

பச்சைப் பட்டாணி - 1 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, தேங்காய் எண்ணெய், கடுகு - தேவைக்கு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் 1 விசில் வரும் வரை பட்டாணியை வேக விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியவுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.

திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

சூப்பரான பச்சைப் பட்டாணி மசாலா ரெடி.

இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News