லைஃப்ஸ்டைல்

மும்பை ஸ்பெஷல் கட்டா மிட்டா முரப்பா

Published On 2019-03-28 09:39 GMT   |   Update On 2019-03-28 09:39 GMT
வட மாநில ஸ்பெஷலான கட்டா மிட்டா முரப்பாவை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முரப்பாவை நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்

புளிப்பான மாங்காய் பெரியது - 1 கிலோ
தண்ணீர் - 2 லிட்டர்
சிட்ரிக் அமிலம் - 1 1/2 டீஸ்பூன்.
சர்க்கரை - 1 1/2 கிலோ,



செய்முறை :

மாங்காயை தோல் சீவி விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ஒரு நாள் காய வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் அமிலம் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

பின் இந்த மாங்காய் துண்டுகளை அதில் போட்டு 1/4 மணிநேரம் வேகவிடவும். சிறிது நேரமாகி வெந்து பாகும் மாங்காயும் சேர்ந்து முரப்பா பதமாக கெட்டியாக வந்து, சீனி தேன் மாதிரி வந்ததும் இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் நிரப்பவும்.

இதனை ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.

புளிப்பும், இனிப்புமாக இருக்கும்.

சிட்ரிக் அமிலத்தை கடைசியில் சேர்க்கலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News