லைஃப்ஸ்டைல்

சத்தான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் லாலிபாப்

Published On 2019-03-27 06:36 GMT   |   Update On 2019-03-27 06:36 GMT
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்துதர விரும்பினால் வெஜிடபிள் லாலிபாப் செய்து கொடுக்கலாம். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2,
கேரட் - 1,
பீட்ரூட் - 1,
முட்டைக்கோஸ் - 100 கிராம்,
பச்சைப்பட்டாணி - கால் கப்
பன்னீர் - 4 சிறிய துண்டுகள்,
கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.



செய்முறை

அனைத்து காய்கறிகளையும் நன்றாக வேக வைத்து சற்று ஆறியதும் மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த காய்கறிகயை போட்டு அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள்.

இந்த மசாலாவை சிறிய வட்டமாகத் தட்டி அதன் உள்ளே ஒரு பன்னீர் துண்டு வைத்து பந்தைப்போல் உருட்டி, அதில் லாலிபாப் ஸ்டிக் சொருகி வைக்கவும். இவ்வாறு மசாலா அனைத்திலும் செய்யவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் லாலிபாப் தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News