லைஃப்ஸ்டைல்

சூப்பரான பாகற்காய் தொக்கு

Published On 2019-03-19 06:34 GMT   |   Update On 2019-03-19 06:34 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காயை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பெரிய பாகற்காய் - 1
தேங்காய் துருவல் - 2 டேபிள் டீஸ்பூன்
மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
புளி - 1 எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு....

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை



செய்முறை :

பாகற்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகயை நீக்கி விட வேண்டும்.

மல்லி, வரமிளகாய், சீரகத்தை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

சுத்தம் செய்த பாகற்காயில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்த பின் பாகற்காயில் இருந்து நீர் வெளியேற்றியிருக்கும். அந்த நீரை வெளியேற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும்.

புளியை நீரில் நன்றாக கரைத்து கொள்ளவும்.

மிக்ஸியில் வறுத்த மல்லி, சீரகம், வர மிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த,
பாகற்காயை போட்டு வதக்கவும்.

பாகற்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் அரைத்த விழுதை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

தொக்கு நிறமானது அடர் சிவப்பு நிறத்தில் மாறியதும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான பாகற்காய் தொக்கு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News