லைஃப்ஸ்டைல்

நெஞ்சு எரிச்சலுக்கு உகந்த இஞ்சி மிட்டாய்

Published On 2019-03-15 09:39 GMT   |   Update On 2019-03-15 09:39 GMT
வயிற்று உப்பிசத்துக்கும், நெஞ்சு எரிச்சலுக்கும் இஞ்சி மிட்டாய் நல்லது. இந்த இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

இளசான இஞ்சி - 200 கிராம்
சுத்தமான பாகு வெல்லம் - 300 கிராம்
கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்



செய்முறை

இஞ்சியைத் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றிக் காய்ச்சுங்கள்.

இளம் பாகு பதம் வந்ததும் இஞ்சி விழுது சேர்த்து, சிறிது நேரம் கிளறுங்கள்.

கோதுமை மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றிக் கிளறுங்கள்.

நெய், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடுங்கள்.

இப்போது சூப்பரான இஞ்சி மிட்டாய் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News