லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான ஜெல்லி பர்பி

Published On 2019-01-24 08:34 GMT   |   Update On 2019-01-24 08:34 GMT
குழந்தைகளுக்கு ஜெல்லி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜெல்லி பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

இளநீர் - ஒரு கப்
அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) (agar agar kadal pasi) - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்



செய்முறை :

ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள்.

ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை கைவிடாமல் கிளறுங்கள்.

கண்ணாடி போல் கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள்.

இதேபோல் தேங்காய்ப் பாலில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொஞ்சம் கொட்டியானதும் முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.

அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும்.

பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

சூப்பரான ஜெல்லி பர்பி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News