லைஃப்ஸ்டைல்

மணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி?

Published On 2019-01-18 08:35 GMT   |   Update On 2019-01-18 08:35 GMT
தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். இன்று சிக்கனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
ஏலக்காய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :


வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.

சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

பின் அதை வடிகட்டி விடவும்.

பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.

இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.

இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News