லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான பன்னீர் புர்ஜி

Published On 2018-11-30 08:41 GMT   |   Update On 2018-11-30 08:41 GMT
பன்னீர் புர்ஜியை சப்பாத்தியுடன் அல்லது தோசைக்கு நடுவில் வைத்து பன்னீர் தோசை செய்தும் சாப்பிடலாம். இன்று இந்த பன்னீர் புர்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை - சிறிதளவு



செய்முறை :

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பன்னீரை கைகளால் சிறிது சிறிதாக உதிர்த்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து கிளறவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதங்கவும்.

தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

2 நிமிடம் கழித்து பிசறி வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா கலவை பன்னீரில் கலக்கும் வரை கிளறவும். 3 நிமிடத்திற்கு மேல் கிளற தேவையில்லை.

இறுதியாக கொத்தமல்லியிலை தூவி இறக்கி பரிமாறவும்.

சுவையான பன்னீர் புர்ஜி தயார் !

குறிப்பு : பன்னீரை அதிகநேரம் சமைத்தால் ரப்பர் போல ஆகிவிடும். எனவே கவனம் தேவை.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News