லைஃப்ஸ்டைல்

சிவப்பு கோஸ் கேரட் சாலட்

Published On 2019-05-09 05:34 GMT   |   Update On 2019-05-09 05:48 GMT
காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு கோஸ் - 1000 கிராம்
கேரட் - 2
பூண்டு - 2 பல்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிவப்பு முட்டை கோஸை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டை கோஸ், துருவிய கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சிவப்பு கோஸ் கேரட் சாலட் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News