லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ்

Published On 2019-05-04 04:56 GMT   |   Update On 2019-05-04 04:56 GMT
வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு, கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு தயிர் கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

கம்பு மாவு - 1 கப்
தயிர் - 3 கப்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிரை நன்றாக கரைத்து கொள்ளவும்.

கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மாவை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

ப.மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் கரைத்த மாவை ஊற்றி நன்றாக கிளறி விடவும். மாவை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

கூழ் வெந்ததும் இறக்கி ஆறியதும் அத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, கரைத்து வைத்துள்ள தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தூவி பருகவும்.

சுவையான கம்பு தயிர் கூழ் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News