லைஃப்ஸ்டைல்

சத்தான கவுனி அரிசி கஞ்சி

Published On 2019-04-23 04:58 GMT   |   Update On 2019-04-23 04:58 GMT
அதிகளவு சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியில் பல்வேறு விதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கவுனி அரிசி - அரை கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
பால் - 1 கப்



செய்முறை :

கவுனி அரிசியை நன்றாக கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

கவுனி அரிசியை அரைக்கும் போது தண்ணீரை தனியாக வடித்து வைத்து அரிசியை மட்டும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை அடி கனமாக பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் ஊறவைத்து தனியாக வைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

கைவிடாமல் கிளற வேண்டும். கலவை நன்றாக வெந்து திக்கான பதம் வரும் போது பாலை சேர்க்கவும்.

பால் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து கலக்கவும்.

சத்தான கவுனி அரிசி கஞ்சி ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News