லைஃப்ஸ்டைல்

சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல்

Published On 2019-02-22 05:08 GMT   |   Update On 2019-02-22 05:08 GMT
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/3 கப்
பாலக் கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
உப்பு - 1/3 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உளுந்து - அரை  டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
முந்திரி - 10



செய்முறை :

வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News