லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த பாசிப்பயிறு அடை

Published On 2019-02-15 04:34 GMT   |   Update On 2019-02-15 04:34 GMT
பாசிப்பயிறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் பாசிப்பயிறை ஊறவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாசிப்பயிறில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசிப்பயிறு - 200 கிராம்,
பச்சரிசி - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
நல்லெண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு,



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பயிறையும், அரிசியையும் நன்றாக கழுவி தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

மிக்ஸியில் பச்சரிசியை தண்ணீர் கலந்து நைசாக அரைத்து பின்னர் தண்ணீர் வடிகட்டிய பச்சை பயிறையும் சேர்த்து அடை மாவுபதத்துக்கு அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு பெருங்காத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

இந்த அடையை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

சூப்பரான பாசிப்பயிறு அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News