லைஃப்ஸ்டைல்

சத்தான காலை உணவு தயிர் சேமியா

Published On 2018-10-31 04:00 GMT   |   Update On 2018-10-31 04:00 GMT
காலையில் எளிய முறையில் சத்தான டிபன் செய்ய விரும்பினால் இந்த தயிர் சேமியாவை செய்யலாம். இன்று இந்த சேமியாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சேமியா - 250 கிராம்
தயிர் - இரண்டு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - நான்கு
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
வறுத்த முந்திரி - பத்து
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

சேமியாவை நெய் சேர்த்து வாணலியில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். சேமியா வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் 2 மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை சேமியாவுடன் சேர்த்து தயிர், கொத்தமல்லி, முந்திரி போட்டு கலக்கவும்.

சுவையான தயிர் சேமியா ரெடி.

குறிப்பு : இதில் விருப்பப்பட்டால் கேரட் துருவல், மாதுளம் பழத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News