லைஃப்ஸ்டைல்

நார்ச்சத்து உணவுகள்

Published On 2019-05-09 02:50 GMT   |   Update On 2019-05-09 02:50 GMT
நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் உதவியை செய்கிறது.
சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு வறுப்பதன் மூலமும் உணவுகளில் உள்ள பல சத்துக்கள் குறைந்துவிடும். சில நேரங்களில் அந்த சத்துகள் அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் உதவியை செய்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொழுப்பு மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்து முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து, ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம்.

இப்போது நவீன கலாசாரம் வந்து விட்டது. அனைத்து வகை உணவுகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்டும் கிடைக்கிறது. ஆனால், இப்படி கிடைக்கும் உணவுப்பொருட்களில் நார்ச்சத்து, முழு அளவில் இருக்காது என்பது தான் நிபுணர்களின் கருத்து. நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன. எதுவுமே அளவு மிஞ்சக்கூடாது என்பார்கள்.

அதுபோலத்தான், நார்ச்சத்தும். உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் போய் விட்டு விடும். வழக்கமான உணவுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும். கோதுமை ரொட்டி, கேக், பிஸ்கட், பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானியங்கள், பழங்களை சாப்பிடலாம். ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.

நார்ச்சத்து என்றால், அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்றவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடக் கூடாது. அதை அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். சூப் செய்வதென்றால், அதிக காய்கறிகளை சேர்க்க வேண்டும். நொறுக்கு தீனியாக உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம்.
Tags:    

Similar News