லைஃப்ஸ்டைல்

புரத குறைபாடும் அதன் விளைவுகளும்

Published On 2019-04-19 08:37 GMT   |   Update On 2019-04-19 08:37 GMT
உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் புரதத்தை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

1. நகம், கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகள்


கூந்தல், நகம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் புரதச் சத்து குறைந்தால் சருமம் சிவந்து போதல், நகம் உடைதல், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

2. தசை இழப்பு

தசைகளின் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. உடலில் புரத குறைபாடு ஏற்பட்டால், முதலில் நீங்கள் தசைகளை இழக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

3. எலும்பு முறிவு ஏற்படும்

எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை பராமரிக்க புரதம் மிகவும் அத்தியாவசியமானது. போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து முறியும் வாய்ப்பு உள்ளது.

4. அதிகபடியான பசி ஏற்படும்

நாள் ஒன்றுக்கு தேவையான புரதம் கிடைத்துவிட்டால் , அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கும். புரத குறைபாடு இருக்கும்போது நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள் இதனால் உடலில் கலோரிகள் சேர்த்து உடல் பருமானாகிவிடும்.

5. நோய் தொற்றின் அபாயம் ஏற்படும்

உடலுக்கு முக்கியமாக தேவைப்படுவது புரதம். புரத குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் மிக எளிதில் நோய் தொற்று ஏற்படும்.

6. ஃபேட்டி லிவர்

புரத குறைப்பாட்டின் மற்றொரு அறிகுறி கல்லீரலில் கொழுப்பு தேக்கமடைவது. கல்லீரல் செல்களில் கொழுப்பு குவிந்து ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தை உண்டாக்கும்.

7. குழந்தைகளில் வளர்ச்சியில் தாமதம்

குழந்தைகளில் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் துணையாய் இருப்பது புரதம். எனவே வளரும் குழந்தைகளுக்கு புரதத்தை அதிகம் கொடுக்க வேண்டும்.

கடல் உணவுகள், சோயா, முட்டை, பீன்ஸ், பால், சீஸ், யோகர்ட், பாதாம், ஓட்ஸ், கோழி, காட்டேஜ் சீஸ், ப்ரோக்கோலி, மீன், சிறுதானியம், பருப்பு வகைகள், பூசணி விதை, ஆளிவிதை, சூரியகாந்தி விதை, இறால், கடலை மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டு புரத குறைபாட்டை விரட்டலாம்.
Tags:    

Similar News