லைஃப்ஸ்டைல்

இரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா?

Published On 2019-04-18 07:43 GMT   |   Update On 2019-04-18 07:43 GMT
வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

ஆம். உண்மையில் ஆரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம். சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் வெந்நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம்.

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது தான் மன அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை உண்டாகும். மேலும் இதனால் தூக்கம் தடைப்படும். தினசரி இரவு நேரத்தில் தூங்க போகும் முன் வெந்நீர் குடித்துவிட்டு தூங்குவதால் உணர்ச்சி நிலை சீராக இருக்கும்.

வெந்நீர் அருந்துவதால், உடலின் உள்ளே வெப்பம் உற்பத்தியாகி, வியர்வையாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நம் உடலுக்கு நீர் என்பது மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வியர்வை, சிறுநீர் போன்றவற்றால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனை சமன் செய்ய தொடர்ச்சியாக நீர் அருந்துவது கட்டாயம். இரவு நேரத்தில் வெந்நீர் குடித்துவிட்டு படுப்பதால் உடலில் நீர் தேவை பூர்த்தியாகிறது.

சாப்பிட்டு முடித்தபின் வெந்நீர் அருந்துவதால் செரிமானம் எளிதாக இருக்கும். கடினமான உணவுகள் கூட எளிதில் ஜீரணமாக்க கூடிய திறன் வெந்நீருக்கு உண்டு. இரவு நேரத்தில் செரிமானம் என்பது சற்றே தாமதமாக இருக்கும். வெந்நீர் குடுப்பதால் அந்த பிரச்சனை இருக்காது.

வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது. காலையும் இரவும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வாழ இதனை பின்பற்றுவோம். 
Tags:    

Similar News