லைஃப்ஸ்டைல்

பற்களை பாதுகாப்பது எப்படி?

Published On 2019-04-05 03:19 GMT   |   Update On 2019-04-05 03:19 GMT
ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலின் பலபாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. வாய்நமது உடலின் கண்ணாடி ஆகும். ஏனெனில் உடலில் ஏற்படும் அனேக நோய்களுக்கு Symptoms வாயில் காணப்படும். மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலின் பலபாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும்.

உதாரணத்திற்கு சொத்தையாகி கெட்டு செமித்துபோன பற்களை எடுக்காமல் வைத்திருப்பவர்களுக்கு தோல்நோய்கள், மூட்டு, இடுப்புவலி மற்றும்மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை ஏற்படுதல் Sinusitis (சைனஸ் ட்ரபுள்) தொண்டையில் சதை வளர்தல், இளநீர் கட்டு இருதய நோய்கள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பற்களில் ஏற்படும் சொத்தையை வலிஇல்லாத காரணத்தால் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பற்களில் ஏற்படும் சொத்தை சிறுவர்களுக்கு பால்பற்களில் வலி உண்டாக்குவதற்கு ஒரு வருடம் ஆகலாம். அதுவே பெரியவர்களுக்கு இரண்டு வருடங்கள் ஆகலாம். எனவே பல்லில் சொத்தை ஏற்பட்டால் வலிவரும். முன் னர் பல் மருத்துவரை சந்தித்து சுத்தப்படுத்தி அடைத்துக் கொள்ளலாம்.

பற்களில் சொத்தை வருவதை தடுப்பது என்பது கடினம் (அரிது) என்பதால் சொத்தை வந்த பற்களை ஆரம்பத்திலேயே (வலிவரும் முன்) சுத்தம் செய்து அடைத்து விடுவது பற்களை இழப்பதை தடுக்கும் எளிய முறையாகும். பற்களில் பின்பக்கங்களிலோ இரு பற்களுக்கு நடுவிலோ, நோயாளிகளுக்கு நேரடியாகவோ, கண்ணாடி மூலமாகவோ பார்க்க இயலாத இடங்களில் சொத்தை வர வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பற்களில் சொத்தை ஏற்படுகிறதா என சோதித்து கொள்ளலாம்.

அப்படியும் சொத்தையான பற்களை ஆரம்பத்தில் அடைக்காமல் விட்டதால் வலி ஏற்பட்டால் பற்கள் நொறுங்கும் நிலைக்கு முன்பாக பல் மருத்துவரிடம் சென்றால் வலி வந்த பற்களுக்கு Root Canal Treatment (பல்வேர் சிகிச்சைசெய்து)பற்களுக்கு Ceramic crown மாட்டியும், பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேலும் ஒரு சில பற்களுக்கு வேர் சிகிச்சை (Root Apiceo tomy) செய்தும் சரி செய்து கொள்ளலாம். மேலும் பொது மக்கள் பொதுவாக ஆண்டிற்கு ஒருமுறை Dental Checkup செய்து கொண்டால் பல் மருத்துவரின் ஆலோசனைபடி பற்களில்சொத்தை வராமலும், பற்களை மற்றும் காரை ஏற்படாமலும் சொத்தை வந்த பற்களை அடைத்தும் பல் ஈறு நோய்கள் வராமலும் தடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதங்களில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பொழுதிலிருந்தே பற்களை சுத்தம்செய்து விடுதல் வேண்டும். குழந்தைகளுக்கு ஆறு வயது வரும் வரையிலாவது பெற்றோர்களின் உதவி பல் துலக்குவதில் இருத்தல் அவசியம். சிறுவயது முதல் வாலிப வயது வரை உள்ளவர்களுக்கு பல் வரிசை சரி இல்லாமல் இருந்தால் Fixed orthodentic Clip மாட்டி சரி செய்து கொள்வது பற்களில் கறை படிவதையும் சொத்தை ஏற்படுவதையும் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.

இந்த Fixed orthodentic Clip மூலம் பற்களில் வரிசையை சரிசெய்து கொள்ளலாம். திரும்பி முளைத்த பற்கள் (Rotated tooth), தெற்றுப் பற்கள் வரிசையை விட்டுமேலோ அல்லது கீழோ உள்ள சிங்கப் பற்கள் (Highly positioned or unerrupted canine teeth) ஆகியவற்றையும் சரி செய்து கொள்ளலாம். மேலும் தற்போது சமுதாயத்தில் பலர் பாக்கு புகையிலை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். பாக்கு, புகையிலை போன்றவற்றை உபயோகப்படுத்துபவர்கள். அதற்கு அடிமையாவதுடன் பசியின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், பல் ஈறு மற்றும் வாய் சளி படலத்தில் (Mucous membram) நோய்கள் ஏற்படுதல் மற்றும் உதடு மற்று கன்னத்தசைகளில் எலாஸ்டிக் தன் மையை (Elasticity of the Buccal and labial mucosa) இழந்து விடுவதும் ஏற்படுகிறது.

இதனால் வாயை முழுமை யாக திறக்க முடியாமலும், ஆறாத புண் ஏற்படுவதற்கும் காரணமாகி காரமான உணவுப் பொருட்களை சிறிதளவும் உண்ண முடியாத நிலையும் இந்த புகையிலை மற்றும் பாக்கு பொருட்களால் ஏற்படும். இதுவே பிற்காலத்தில் sub mucous Fibrosis மற்றும் oral cancer (வாய் புற்றுநோய்) ஏற்படுவதற்கும் உகந்ததாகி விடும். எனவே பாக்கு, புகையிலை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

17 அல்லது 18 வயதுக்கு மேல் wistomteeth (ஞானப்பல் அல்லது ஒவ்வொரு வரிசையிலும் கடைசிப்பல்)முளைக்கும் காலத்தில் ஈறு புண் உண்டாகுதல், வாய் துர்நாற்றம், நெறி கட்டுதல் ஆகியவை ஏற்படலாம். மேலும் இந்த wisdom teeth வரிசையை விட்டு விலகியும் படுக்கை வசமாகவோ (Impacted tooth) முளைக்க வாய்ப்பு உண்டு.

இவ்வாறு முளைக்கும் பற்கள், பல்ஈறு வீக்கம் அருகில் உள்ள பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு காரணமாகுதல், அருகில் உள்ள பற்கள் அசையும் நிலைக்கு காரணமாகுதல் மற்றும் தலைவலி, கண்ணில் எரிச்சல், காதுகள் மற்றும் கழுத்து, தோள் பகுதிகளில் வலி, அடிக்கடி சளிபிடித்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும்.

எனவே 17, 18 வயதுக்கு பிறகு wisdom teeth முளைக்கும் காலத்திலும் Dental Checkup செய்து கொள்வது நல்லது. எனவே பற்களை ஒழுங்காக துலக்காதவர்கள்தான் பல் மருத்துவமனை செல்கிறார்கள் என்ற தவறான மனஎண்ணத்தை தவிர்த்து பல் மற்றும் ஈறு நோய்களை வராமல் தவிர்க்கவும், வந்த நோய்களை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்வதால் பற்களையும் அதன் பயன்பாட்டையும் இழப்பதை தவிர்க்க வும், உடல் ஆரோக்கியத்து டன் நீடூழி வாழ பல் பராமரிப்பும் periodical and regular dental checkup மிக அவசியம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்வது நல்லது.

எமது மருத்துவமனையில் நவீன B.P.S. என்னும்முறையில் சொத்தை பற்களை எடுத்துவிட்டு புதிய பற்கள் கட்டப்படுகிறது. இந்த செயற்கை முறையால் அதிக காற்றழுத்தத்துடன் அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் மிகவும் இயற்கை பற்களைபோல உறுதியாகவும், பளபளப்புடனும் காணப்படுகிறது. இந்த முறையில் பற்கள் கட்டுபவர்களுக்கு கழண்டு வராமல் உறுதியான பிடிப்புடன் இருக்கிறது.

நன்றாக கடித்து உண்ணமுடியும். கீழ்த் தாடை எலும்பு தேய்ந்து போனவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல்கட்ட அளவு எடுக்கும்போது எந்த அளவுக்கு பிடிப்பாக இருக்கும் என்பதை அறிந்துதேவையான அளவுக்கு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். இம்ளாண்ட் Supported Denture - தாடை எலும்பில் டைட்டானியம் ஸ்க்ரு மாட்டி அதன் மேல் நிலையான பெர்மனன்ட் பல் மாட்டும் முறையிலும் பல் செட் மாட்டிக்கொள்ளலாம்.

டாக்டர் சங்கர் சுதாகர், பல் மருத்துவர், சுதா பல் மருத்துவமனை, சுரண்டை.
Tags:    

Similar News