லைஃப்ஸ்டைல்

வெயிலை சமாளிப்பது எப்படி?

Published On 2019-03-20 08:37 GMT   |   Update On 2019-03-20 08:37 GMT
இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோம்.
உஸ்! அப்பா என்ன வெயில் என எல்லோருமே கூறும் அளவு, சுட்டெரிக்கும் கத்தரி வெயில் தொடங்கி விட்டது. இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோமா?

ஒவ்வொரு சீஸனுக்கும் ஏற்ற வகையில் நமக்கு பழங்கள் கிடைக்கின்றன. பழங்களும் பச்சைக்காய்கறிகளும் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். இவற்றிலுள்ள மினரல்களும் விட்டமின்களும் நமது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும், அதுமட்டுமல்ல இதில் உள்ள நீர்ச்சத்தும் உடலுக்கு குளுமையை அளிக்கும். இவை நமது உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற உதவும்.

நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த சம்மருக்கு முக்கியமான தாரகமந்திரம் குறைவாக சாப்பிட்டு நிறைவாக வாழுங்கள். சரி பழம், பச்சைக்காய்கறி சாப்பிட வேண்டும் என்று பார்த்தோம் , எந்த பழம், காய் என்று பார்ப்போமா?

பழங்களில் பெரிக்கள் - ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, ராஸ்ப்பெரி, பப்பாளி, மாம்பழம், கீர்ணிப்பழம், தர்பூசணி, ஆப்பிள், செர்ரி, காய்கறிகளில் பாகற்காய், கோஸ், காலிப்ளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆல்கஹால் உள்ள பானங்கள், சாப்ட் டிரிங்ஸ் குடிப்பதை தவிருங்கள், ப்ரெஷ் ஜூஸ் குடிக்கத் தொடங்குங்கள். மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதை தவிருங்கள். அவ்வாறு குடிப்பது அந்த நேரத்திற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கெடுதலையே விளைவிக்கும்.

லெமன் ஜூஸ், இளநீர் குடியுங்கள். “மோர் பெருக்கி நெய்யுருக்கி” என்பார்கள், நீர்த்த மோர் குடியுங்கள். சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். வடை, அப்பளம், சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பண்டங்களையும் தவிருங்கள். சூடான, மசாலா உணவுப்பதார்த்தங்களை அறவே தவிருங்கள். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News