லைஃப்ஸ்டைல்

முதுகு, கால்களை வலிமையாக்கும் பாதாங்குஸ்தாசனம்

Published On 2019-05-16 09:04 GMT   |   Update On 2019-05-16 09:04 GMT
இந்த ஆசனம் கால்களுக்கு வலிமை தரும். உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
பாதாகுஸ்தாசனம் அல்லது கால்விரல்கள் நிலைப்பாடு என்பது உங்கள் உள்தொடைகள், இடுப்பு மற்றும் உங்கள் முழங்கால்களின் பின்புறத்தை நீட்டிப்பு செய்ய சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனம் உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம். இது இனப்பெருக்க அமைப்பு ஒழுங்குபடுத்த மற்றும் செரிமான அமைப்பு சீராக இயங்கவும் உதவுகிறது.

செய்முறை :

விரிப்பில் வசதியாக சுகாசனம் அல்லது சுலபமான அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இடது காலை வளைத்து, உங்கள் இடது பாதம் உங்கள் இடது பிட்டத்தின் அருகில் வரும் படி வையுங்கள். பின்பு உங்கள் வலது பாதத்தை வளைத்து அதை உங்கள் இடது பாதத்தின் அருகில் வரும் படி வையுங்கள்.

மெதுவாக உங்கள் எடை முழுவதையும் உங்கள் கால்விரல்களில் மாற்றி உங்கள் கைகளை உங்கள் உடலின் பக்கவாட்டில் ஆதரவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் முதுகை நேராக வைத்துக் கொள்ள நினைவில் கொள்ளுங்கள்.

மெதுவாக உங்கள் இடது பாதத்தை தூக்கி அதை உங்கள் வலது தொடை மீது வையுங்கள். உங்கள் வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் முழு உடலின் எடை இப்போது உங்கள் கால்விரல்களில் மற்றும் வலது பாதத்தின் பந்தில் இருக்கிறது. சமநிலை படுத்த முயலும் போது உங்கள் உடலை மிகவும் அதிகமாக நகர்த்தாதீர்கள்.

நீங்கள் நிலையில் உங்களை சமப்படுத்திய பின், உங்கள் உள்ளங்கைகளை இங்கள் மார்புக்கு முன் இணைத்து சில அடுத்தடுத்த ஆழமான மூச்சுகளை எடுங்கள். நீங்கள் நிலையில் இருக்கும் போது உங்கள் மூச்சை பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

அதிலிருந்து விடுபட, மெதுவாக உங்கள் கைகளை உடலின் பக்கவாட்டில் எடுத்து மெதுவாக உங்கள் இடது காலை இறக்குங்கள். இந்த நிலைகளை உங்கள் மற்றொரு காலுடன் திரும்ப செய்யுங்கள். இவ்வாறு  3 முதல் 5 முறை செய்யவும்.
Tags:    

Similar News