லைஃப்ஸ்டைல்

குழந்தை வளர்ப்பில் இந்த தவறுகளை செய்யாதீங்க

Published On 2019-05-02 08:07 GMT   |   Update On 2019-05-02 08:07 GMT
பெற்றோர் தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.
பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.

மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.

எந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது. இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.



எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.

அரவணைக்காமல் இருத்தல் ஒருவரையொருவர் அன்னியோன்யமாக ஆரக் கட்டித்தழுவி அரவணைத்துக் கொள்வதால், மனது மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குப் பலவிதமான நன்மைகள் கிட்டுகின்றன என அறிவியலாளர்கள், அரவணைப்பின் முக்கியத்துவத்தை நிரூபித்து உள்ளனர். கட்டித்தழுவிக்கொள்வதால் வெளிப்படையாக ஏராளமான பயன்கள் உண்டாகின்றன. ஒருவேளை, நீங்கள் உங்கள் குழந்தையை அரவணைப்பது இனிய அனுபவம் என ஏற்றுக்கொள்ளலாம்.

தங்க நிமிடங்களைத் தவற விடுதல் ‘நீங்கள் சிறந்த பெற்றோர்’ என்ற பெயர் எடுப்பதற்கு, உங்களுடைய வாரிசுகளின் பால்ய காலங்களைப் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து வைப்பது உதவும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை, இவ்வாறு நீங்கள் செய்யாமல் விடுவதால் அது உங்களுடைய மழலைகளின் மன வலிமை, நல்ல பழக்க வழக்கங்கள் அல்லது உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்காது.

குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.

Tags:    

Similar News