லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க என்ன வழி?

Published On 2019-04-09 06:49 GMT   |   Update On 2019-04-09 06:49 GMT
வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.
குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு அடித்தளம் அமைத்துத்தருவது பெற்றோர்களின் கடமை என்பதில் நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, தண்டனைகள் தருவது, அதனால் மனதளவில் தானும் காயமடைந்து, பிள்ளைகளையும் காயப்படுத்தி, பின் வருத்தப்படுவது என பழைய பாரம்பரியமான ஒழுக்கமுறையே கடைபிடிக்கிறார்கள். இவர்களெல்லாம் எதிர்மறை ஒழுக்கமுறைக்கு உதாரணம் என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

Positive Discipline கொள்கைகள் நம் நாட்டு குழந்தைகளிடம் எப்படி நடைமுறைப்படுத்துவது?


பாசிட்டிவ் டிசிப்ளின் என்பது நல்ல விஷயம்தான். நம் நாட்டிற்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். அவர்களது கலாச்சாரத்தில் குறிப்பிட்ட வயதுக்குமேல் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்வதில்லை. குழந்தையிலிருந்தே தற்சார்புடன் வாழக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு சில குழந்தைகளிடம் இந்த அணுகுமுறை செல்லுபடியாகும். எல்லா குழந்தைகளிடமும் செல்லாது. இன்னிக்கு பார்த்தால், நிறைய குழந்தைகள் சுயநலமாக இருக்கிறார்கள்.

நாம் சுயநலமாக இருக்கிறோம் என்பதை உணர்வதும் இல்லை. ‘என்னைத் தாண்டிதான் மற்றவை எல்லாம்’ என்று நினைக்கிறார்கள். அதற்கு தனிக்குடித்தன முறையா அல்லது சமூக மாற்றமா என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளிடம் எப்போதுமே கனிவாக நடந்து கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. கண்டிப்பு ஒன்றுதான் மருந்தாக இருக்கிறது. இருந்தாலும் அதன் அடிப்படையில் சில விஷயங்களை கடைபிடிக்கலாம்…

நீண்ட நாள் கடைபிடிக்க வேண்டிய ஒரு பழக்கத்தை குழந்தையிடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், அதை நாம் பக்கத்திலிருந்து மெதுவாக புரியும்படி சொல்லித் தரவேண்டும். அந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் நன்மை, அதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை, அதை செய்யாமலிருந்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதைச் சரியாக செய்துவிட்டால், சின்னதாக பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

ஒரு பொருளை கேட்கும்போது எடுத்தவுடன் ‘நோ’ சொன்னால் கண்டிப்பாக அப்செட் ஆகிவிடுவார்கள். ஒரு 10 வயது பையன் லேப்டாப் கேட்கிறான் என்றால், அது அவனுக்குத் தேவையா? தேவையில்லையா என உணர வைக்க முயற்சி செய்யலாம். எடுத்தவுடன் வாங்கிக் கொடுத்துவிட்டாலும், அதன் மதிப்பை அவன் உணரமாட்டான்.

பெற்றோரைத்தான் குழந்தைகள் உதாரணமாகப் பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்கள் குழந்தை செய்யக்கூடாது என்று நினைத்தால், அதை நீங்கள் செய்யக்கூடாது. நல்ல நடத்தைகளை வளர்க்க, குழந்தை செய்யும் நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்த தொடங்குங்கள்.

வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும். 
Tags:    

Similar News