லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்

Published On 2019-03-29 03:29 GMT   |   Update On 2019-03-29 03:29 GMT
அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள்.
அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள். ஆனால், இதுதவிர ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது.

அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.

பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.
Tags:    

Similar News