லைஃப்ஸ்டைல்

இன்றைய குழந்தைகள் மறந்து போகும் பாரம்பரிய விளையாட்டுகள்...

Published On 2019-03-04 03:37 GMT   |   Update On 2019-03-04 03:37 GMT
இன்றைய தொழில்நுட்பத்தால் கோடைகாலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்றைய குழந்தைகள் மறந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகவே நாம் பார்க்கிறோம்.
இன்றைய தொழில்நுட்பத்தால் கோடைகாலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்றைய குழந்தைகள் மறந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகவே நாம் பார்க்கிறோம். அக்காலத்தில் நமக்கு புளியங்கொட்டை, சோழி மற்றும் முத்துகள் கொண்டு வயதுக்கு வந்த பெண்கள் பல்லாங்குழி ஆடுவது மிகச்சாதாரணமாக பார்க்க முடியும். பல்லாங்குழிக்கு பின்னால் விரலுக்கு பயிற்சி கணக்கு பயிற்சி, பெண்கள் வீட்டு வேலைகளை தெளிவாக சிறப்பாக செய்யவும் மற்றும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் குணம் போன்ற பல அரிய பழக்கங்கள் விடுமுறை நாட்களிலே கற்றுக்கொள்ள முடியும்.

இப்பொழுது பல்லாங்குழி பலகையே எந்த ஒரு வீட்டிலும் பார்க்க முடியவில்லை. கால் உடைந்த குதிரையாக சீரியலும், டிக்-டாக்கும் கைப்பேசிக்குள்ளே அடைப்படுவது குழந்தை, பெண்களுக்கு நல்லதா?. பருப்பு கடைஞ்சி விளையாடி அனைவருக்கும் பிரித்துக்கொடுக்கும் குழந்தை நாட்போக்கில் சமுதாய அக்கறையோடு வளர்ந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யும். காளையை அடக்கவும் செய்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள்.

பாரம்பரிய விளையாட்டு தாய்-தந்தை, பெரியோர்கள் உறவுகள், நட்புகள் என அனைவரின் குணங்களையும் செதுக்குவதாக அமைந்துள்ளது. இதே போல் கோலி, பம்பரம், ஆடுபுலி ஆட்டம், தாயம், பாண்டியாட்டம், கண்ணாமூச்சி, பச்சைக் குதிரை, திருடன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்காய், கில்லி போன்ற விளையாட்டுகள் பயனுள்ள பொழுதுபோக்கு மட்டும் அல்ல மனிதாபிமானம், விடாமுயற்சி, சிந்திக்கும் திறன், தன்னம்பிக்கை என சுய ஒழுக்கங்கள் வளர காரணமாக இருப்பது என்பது மறைக்கமுடியாத உண்மை. மனக்கூர்மை, படைப்பாற்றல் நினைவாற்றல் மேம்பாடு, சுயசிந்தனை, உடல் மனப்பயிற்சி போன்ற குணங்களை கொண்டது நமது பாரம்பரிய விளையாட்டு.

கூடி விளையாடிய ஆட்டங்கள் இன்று மறைந்து விட்டன. அக்கம்பக்கம் பழகவே தயங்கும் இன்றைய இளம் தலைமுறையிடம் குழு விளையாட்டில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக வழக்கொழிந்து போகும் பாரம்பரிய விளையாட்டை தேடிப்பிடித்து பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.

பாரம்பரிய விளையாட்டில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதை அறியாத இளைஞர்கள் கைப்பேசியில் விளையாடி தங்களுக்கான அடையாளங்களை தொலைத்துவிடுகின்றனர். எனவே நம் பாரம்பரிய விளையாட்டை பேணி காக்க வேண்டும்.

முனைவர் கரு.செந்தில்குமார், நூலகர், கோவை.
Tags:    

Similar News