லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை தனியறையில் அமர்ந்து டிவி பார்க்க அனுமதிக்கலாமா?...

Published On 2019-01-01 06:13 GMT   |   Update On 2019-01-01 06:13 GMT
குழந்தைகள் வீட்டில் தனி அறையில் உட்கார்ந்து, தனியாக டிவி பார்த்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று முடிவு வெளியிட்டுள்ளது.
தற்போதைய நாகரிக வளர்ச்சி காலத்தில், பிரைவசி என்ற பெயரில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தனி அறையையும் அதில் கார்ட்டூன் சேனல்கள் பார்ப்பதற்கான வசதியையும் செய்து கொடுக்கிறார்கள்.

குழந்தைகளும் அதை முதலில் ஒருவித தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டு, பின் அதுதான் நம்முடைய உலகம் என்று முழுமனதாக ஏற்று, அதிலேயே மூழ்கிப் போய்விடுகிறார்கள்.

அடுத்து பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட்டு வரும்வரை, தங்களுடைய அறைக்கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படி குழந்தையாக இருக்கும்போது, தனியாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிப்பவர்கள் வளர்ந்த பிறகு, அதுவே மிகப்பெரிய அளவில் உடல்நலக் கோளாறுகள் உண்டாகக் காரணமாக அமைகின்றன.

குறிப்பாக, அளவுக்கதிகமாக உடல் எடை கூடிவிடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே வயதில் உள்ள டிவி பார்த்த குழந்தைகளுக்கும் டிவி பார்க்காத குழந்தைகளுக்குமான உடல் எடை சரிபார்க்கப்பட்ட போது, அதில் மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

தனி அறையில் தனிமையில் டிவி பார்க்கும் குழந்தைகளின் உடல் எடை மற்ற குழந்தைகளின் எடையை விட கூடுதலாக இருப்பது தெரிய வந்தது.

அதனால் குழந்தைகளை மனிதர்களோடு அதிக நேரம் பழக விட வேண்டும். அவர்களுடைய வேலையை அவர்களாகவே செய்துகொள்ளப் பழக்க வேண்டும். 
Tags:    

Similar News