ஆன்மிகம்

ஜெயம் தரும் துவஜ யோகம்

Published On 2019-05-24 08:39 GMT   |   Update On 2019-05-24 08:39 GMT
துவஜ யோகத்தில் பிறந்தவர்கள் தலைமை பண்புகளுடன் பிறந்துள்ளார்கள் என்றும், அவரது உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் அர்த்தம்.
துவஜம் என்ற சொல்லிற்குக் கொடி என்று பெயர். அதாவது, இந்த யோகத்தில் பிறந்தவர்கள் தலைமை பண்புகளுடன் பிறந்துள்ளார்கள் என்றும், அவரது உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் அர்த்தம்.

துவஜ யோகம் என்பது ஒருவரது லக்னத்தில் சுப கிரகங்களான குரு, சுக்ரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் இருந்து, லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஆகியவை இருக்கும் நிலையாகும். துவஜ யோகம் என்பது அரிதான யோகம் என்ற நிலையில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பிறக்கும்போது குடும்பத்தில் செல்வச் செழிப்பு இல்லை என்றாலும் இவர்கள் பிறந்த பின்னர் செல்வ வளம் ஏற்படும்.

இளம் வயதிலேயே சிறந்த ஆளுமை கொண்ட இவர்களுக்கு வசதியான வீடு, ஆடம்பர வாகனங்கள், சேவைபுரியும் பணியாட்கள் என ஒரு மன்னருக்கு நிகரான வாழ்க்கை வாழ்வார்கள். இந்த யோகத்தில் பிறந்த பலரும் கல்வியில் ஆர்வம் கொள்ளாமல், இளம் வயதிலேயே தொழில் மற்றும் வியாபார துறைகளில் ஈடுபட்டு, சிறந்த நிர்வாகிகள் என பெயரெடுப்பார்கள்.

சமூகத்திற்கு அவசியமான பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை கட்டி தந்து அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெறுவார்கள். துவஜ யோக ரீதியாக எட்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருப்பதால், அவ்வப்போது சில ஆயுள் கண்டங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டாலும், தர்ம காரியங்கள் மற்றும் இறைவழிபாடு ஆகியவை மூலம் ஆபத்துகளை தவிர்த்து விடுவார்கள்.
Tags:    

Similar News