ஆன்மிகம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2019-05-20 05:57 GMT   |   Update On 2019-05-20 05:57 GMT
பவுர்ணமியையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News