ஆன்மிகம்

தியாகராயநகர் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2019-05-17 03:43 GMT   |   Update On 2019-05-17 03:43 GMT
தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவிலில் வெங்கடாஜலபதி பத்மாவதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஏகாதசி அன்று சுக்லபட்சத்தில் வெங்கடாஜலபதி பத்மாவதி தாயார் திருமண நாளை கொண்டாடும் வகையில் உலக நன்மைக்காக ‘பரிணயோத்சவம்’ என்ற திருவிழா 3 நாட்கள் நடக்கிறது.

அப்போது வெங்கடாஜலபதிக்கும் பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவ உற்சவம் நடந்து வருகிறது. இதேபோன்று சென்னையில் உள்ள பக்தர்களும் இதனை தரிசிக்க வேண்டும் என்பதற்காக சென்னை, தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் பரிணயோத்சவம் விழா நடந்தது.

விழாவையொட்டி சீனிவாசபெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருக்கு விஷ்வக்ஸேன ஆராதனை, மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவில் கமிட்டி தலைவர் ஸ்ரீகிருஷ்ணா, உதவி நிர்வாக அலுவலர் ரவி, முன்னாள் கமிட்டி தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, உபயதாரர் பி.வி.ஆர்.கிருஷ்ணராவ் மற்றும் வருமானவரித்துறை முதன்மை கமிஷனர் முரளிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News