ஆன்மிகம்

நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2019-05-13 06:52 GMT   |   Update On 2019-05-13 06:52 GMT
ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று ஆயில்ய நட்சத்திரம் ஆகும். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகராஜா கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை 4 மணியில் இருந்தே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளாவை சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ் சள் பொடி தூவியும் வழி பாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்கு அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நாகராஜரை வணங்கச் சென்றார்கள். ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த பூஜைகளில் ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சிவன், அனந்த கிருஷ்ணர் ஆகிய சாமிகளை பக்தர்கள் வணங்கினார்கள். 
Tags:    

Similar News