ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்

Published On 2019-05-11 04:06 GMT   |   Update On 2019-05-11 04:06 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

வசந்த உற்சவத்தின் போது கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர்நிரப்பி அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஒய்யாரமாக வீற்றிருப்பார். விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாள் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளல், தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது 13-ந் தேதி அன்று விஸ்வரூபசேவை கிடையாது. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணிமுதல் 12 மணிவரையும், மதியம் 2 மணிமுதல் 3 மணிவரை மற்றும் மாலை 5 மணிமுதல் இரவு 8.45 மணிவரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News