ஆன்மிகம்
சக்திமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

சக்திமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2019-05-03 05:46 GMT   |   Update On 2019-05-03 05:46 GMT
கோவை ஸ்ரீசக்தி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருவீதி உலா, அம்மன் பூச்சட்டி எடுத்து விளையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியில் கண் திறந்து காட்சி அளித்த ஸ்ரீசக்தி முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 30-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதையடுத்து 108 குடம் நீராட்டுதல், அக்கினி கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 7-ந் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா, அம்மன் பூச்சட்டி எடுத்து விளையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 7-ந் தேதி இரவு 10 மணிக்கு அம்மன் அழைத்தல், திருமண வைபோகம், 8-ந் தேதி காலை 10 மணிக்கு சக்தி கரகம் அழைத்து வருதல், அலகு குத்தி வருதல், பூமிதித்தல், 9-ந் தேதி பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 10-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா அன்னதானம், இரவு 7 மணிக்கு மறுபூஜை, அபிஷேக பூஜை, அம்மன் திருவீதி உலா, வான வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

11-ந் தேதி மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News