ஆன்மிகம்

கிருஷ்ணரின் மனைவிகளுள் ஒருவரான சத்யபாமா

Published On 2019-04-26 09:10 GMT   |   Update On 2019-04-26 09:10 GMT
கிருஷ்ணரின் மனைவிகளுள் ஒருவர் சத்யபாமா. சத்யபாமாவிற்காக கிருஷ்ண பகவான் கற்பக விருட்சத்தை துவாரகைக்கு கொண்டு வந்த கதையை அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணரின் மனைவிகளுள் ஒருவர் சத்யபாமா. ஒருமுறை நாரதர், தேவலோகத்தில் இருந்து தான் கொண்டு வந்திருந்த கற்பக விருட்சத்தின் மலர்களை கிருஷ்ணரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணர், அந்த மலர்களை சத்யபாமாவைத் தவிர தன்னுடைய மற்ற மனைவியர்களுக்கு எல்லாம் கொடுத்தார். இதனால் சத்யபாமா வருத்தம் கொண்டாள்.

தன் தவறை உணர்ந்த கிருஷ்ணர், உடனடியாக சத்யபாமாவை அழைத்துக் கொண்டு தேவலோகத்திற்குச் சென்றார். அங்கு தேவேந்திரனைச் சந்தித்து, கற்பக விருட்ச மலர்களைத் தரும்படி கேட்டார். ஆனால் மலர்களைத் தருவதற்கு இந்திரன் மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கிருஷ்ணரின் வாகனமான கருடன், கற்பக விருட்சத்தை வேருடன் பிடுங்கி எறியத் தயாரானது.

இந்திரனும் இடியை உருவாக்கி அதனுடன் சண்டையிட்டான். அந்த சண்டையில் இந்திரன் தோற்கடிக்கப்பட்டான். கற்பக விருட்சம் துவாரகைக்கு கொண்டு வரப்பட்டு, சத்யபாமாவின் அரண்மனைக்கு முன்பாக இருந்த நந்தவனத்தில் நட்டுவைக்கப்பட்டது.
Tags:    

Similar News