ஆன்மிகம்
ஓலை பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் திருத்தேரை தலையில் சுமந்து சென்ற காட்சி.

ஓலை பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா

Published On 2019-04-26 05:39 GMT   |   Update On 2019-04-26 05:39 GMT
தொட்டியம் அருகே ஓலை பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிடாரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஓலை பிடாரி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை பனை ஓலையால் வடிவமைக்கப்பட்ட பிடாரி காளியம்மன் 29 அடி உயரம் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் நடந்த திருத்தேர் வீதிஉலாவில் பக்தர்கள் தேரை தலையில் சுமந்து கொண்டு கிடாரம், மேலூர், குண்டாங்கல் பாளையம், அய்யம்பாளையம், சூரம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்றனர்.

அந்தந்த கிராமங்களுக்கு செல்லும்போது ஊர் பொதுமக்களும், பக்தர்களும் மாவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் எல்லை உடைக்கும் நிகழ்ச்சியும் கிடாவெட்டு பூஜையும் நடைபெற்றது. நேற்று திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழாவிற்காக மீண்டும் திருத்தேர் வீதிஉலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி களும், பொதுமக்களும் செய்திருந்தனர். 
Tags:    

Similar News