ஆன்மிகம்

பாதுகாப்பாக பயணத்திற்கு உதவும் பாடிகார்டு முனீஸ்வரர்

Published On 2019-04-25 10:15 GMT   |   Update On 2019-04-25 10:15 GMT
புதிய வாகனங்களுக்கு பாடிகார்டு முனீஸ்வரர் முன்பாக நிறுத்தி, பூஜைகளை செய்த பின்னரே அவற்றை மக்கள் ஓட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன் மூலம் பாதுகாப்பாக பயணம் செய்ய முனீஸ்வரர் துணை நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
சென்னையில் பிரபலமாக உள்ள பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், பல்லவன் சாலையில், ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. 1919-ம் ஆண்டு ஆற்காட்டில் இருந்து கொண்டு வந்து அமைக்கப்பட்டதாக சொல்லப்படும் பாடிகார்டு முனீஸ்வரருக்கு பின்னணியில் பெரிய கதையே உள்ளது. இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் குடியிருப்புக்கு, ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் குடியேறினர். அதில் ஒரு கமாண்டருக்கு பாடிகார்டு முனீஸ்வரர் கோவில் அங்கே இருப்பது பிடிக்கவில்லை.

அந்த கோவிலை இடம் மாற்றி அமைக்கும்படி உத்தரவிட்டார். அடுத்த நாள் நடந்த ஒரு விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவ மனையில் பலநாள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கு காரணம் பாடிகார்டு முனீஸ்வரன் கோபம்தான் என்று மக்கள் நம்பினர். அதன் பின்னர் அந்த அதிகாரி கோவில் இடமாற்றம் பற்றி எதுவும் பேசவில்லை.

புதியதாக வாங்கப்படும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை, பாடிகார்டு முனீஸ்வரர் முன்பாக நிறுத்தி, பூஜைகளை செய்த பின்னரே அவற்றை மக்கள் ஓட்டிச் செல்வது இந்தப் பகுதியில் வழக்கமாக இருந்து வருகிறது. அதன் மூலம் பாதுகாப்பாக பயணம் செய்ய முனீஸ்வரர் துணை நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
Tags:    

Similar News