ஆன்மிகம்
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வேர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வேர்களால் அலங்காரம்

Published On 2019-04-05 03:39 GMT   |   Update On 2019-04-05 03:39 GMT
கும்பகோணம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வேர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜர் நகர் மெயின்ரோட்டில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பங்குனி மாத அமாவாசையான நேற்று அதிகாலை 5 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து, கோடை மழை பெய்து வறட்சி நீங்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் மூலவர் மற்றும் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வேர், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்தனர்.

தொடர்ந்து 5 மணி நேரம் அகண்ட ராமநாம பாராயணம், வருண ஜெபம், நாம சங்கீர்த்தனம், கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, ஆஞ்சநேயருக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News