ஆன்மிகம்

முருகப்பெருமானின் முதல்படை வீடு

Published On 2019-01-24 09:10 GMT   |   Update On 2019-01-24 09:10 GMT
முருகப்பெருமான் அருளும் ஆலயங்களில் ‘திருப்பரங்குன்றம்’ திருத்தலம், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்துள்ளது.
முருகப்பெருமான் அருளும் ஆலயங்களில் ‘திருப்பரங்குன்றம்’ திருத்தலம், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் சூரபதுமனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு, தேவேந்திரனின் மகளான தெய்வானையை மணம் முடித்துக் கொடுக்க முடிவானது.

அந்த விருப்பத்தை தேவேந்திரன், முருகப்பெருமானிடம் கூறினார். அதற்கு முருகப்பெருமான், “திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறியதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் முருகன்-தெய்வானை திருமணம் நடந்தது. சிவபெருமான், முருகனுக்கு முதன்மை ஸ்தானத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்து கொடுத்தார். இதனால் திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக திகழ்கிறது.
Tags:    

Similar News