ஆன்மிகம்

சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழா தொடங்கியது

Published On 2018-12-12 06:02 GMT   |   Update On 2018-12-12 06:02 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் பிரசித்தி பெற்ற வஞ்சுளவல்லி தாயார் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை ஆண்டுக்கு இரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுக்கான முக்கோடி தெப்பத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சீனிவாச பெருமாள், வஞ்சுள வல்லி தாயார் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும், தீபாராதனையும் நடந்தது.

பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்களும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. வருகிற 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கல்கருடன் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் வசந்த மாளிகை நெல்லை ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News