ஆன்மிகம்

கருடனை கருடாழ்வார் என்று போற்ற காரணம்

Published On 2018-09-19 07:45 GMT   |   Update On 2018-09-19 07:45 GMT
இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.
கருடனுக்குக் ‘கருடாழ்வார்’ என்ற பெயரும் உண்டு. கிருதயுகத்தில் அகோபிலத்தைக் கொடுங்கோலனாக ஆட்சி செய்து கொண்டிருந்தான், இரண்யகசிபு. அவனை அழித்துத் தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த மனிதன் மற்றும் சிங்க உருவிலான அவதாரமே நரசிம்மர் தோற்றமாகும்.

பிரகலாதனைக் காக்க இறைவன் நரசிம்ம மூர்த்தியாக, இரண்யகசிபுவின் அரண்மணைத் தூணில் இருந்து வெளிவந்தார். அதனால் நரசிம்மர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்துத் தனியாக வரவேண்டியதாயிற்று. இது பற்றி அறிந்த கருடன் மிகவும் துயரமடைந்து, இறைவனிடம் தனக்கு நரசிம்மத் தோற்றக் காட்சியைக் காட்டி அருளும்படி வேண்டினார்.

இறைவன் கருடனை அகோபிலம் சென்று தவமியற்றும்படி கூறினார். அதன்படி கருடனும் அகோபிலம் சென்று தவமியற்ற, இறைவன் அங்கிருந்த மலைக்குகையில், உக்ர நரசிம்மராய் அவருக்குக் காட்சியளித்தார். இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று அவரிடம் முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.
Tags:    

Similar News