திருச்செந்தூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு, கடல் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மறுநாள் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து, சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கம்பர் சமுதாய விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.