மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.
எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள். எத்தனையோ தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து முறையிட்டு, எதுவும் நடக்காமல் சலிப்படைந்தவர்கள், நரசிம்மரிடம் சரண் அடைந்து நினைத்தது நிறைவேற காண்பார்கள். எனவே நரசிம்மர் தனது பக்தர்களைத் தக்க சமயத்தில் காத்து அருளும் கடவுளாக கருதப்படுகிறார்.