நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழாவின் 4-வது நாளான சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் மாலையில் சுவாதி, லாவண்யா சுந்தரராமன் ஆகியோர் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பரதநாட்டிய நிகழ்ச்சிகள், மஹிமா பிரபு குழுவினரின் கீ போர்டு இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.
இன்று (சனிக்கிழமை) 5-வது திருநாளில் காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களிலும், இரவு 8 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதே போல் மாலையில் பரதநாட்டியம், பக்தி இசை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகின்றன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.