ஆன்மிகம்

சந்திர பகவான் காயத்ரி மந்திரம்

Published On 2019-06-10 05:36 GMT   |   Update On 2019-06-10 05:36 GMT
திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும்.
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்


பொருள் - “தாமரைப்பூ சின்னம் பொறித்த கொடியை உடையவராகவும், பொன்னிற ஒளியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் சந்திர பகவானை வணங்குகிறேன். அத்தகைய சந்திர பகவான் எனது அறிவாற்றலை சிறக்கச் செய்து, என் வாழ்வில் ஒளிவீச அருள்புரியுமாறு வேண்டுகிறேன்” என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் சரியான பொருளாகும்

சந்திர பகவானின் இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை துதிப்பது சிறந்தது. திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். கண்பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும். அழகு மற்றும் இளமைத் தோற்றம் உண்டாகும். செல்வமும் பெருகும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடப்பவர்கள் இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை தினமும் ஒரு துதித்து சந்திரனால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கும்.
Tags:    

Similar News