ஆன்மிகம்

அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2019-02-01 05:28 GMT   |   Update On 2019-02-01 05:28 GMT
சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் (4.1.19), அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
அமாவாசை திதியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தை ‘அமாசோமவாரம்’ என்பார்கள். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பு. சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில், அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து,

‘மூலதோ பிரம்ஹரூபாய,
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ
ராஜய தே நமோ நம’

என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.
Tags:    

Similar News