ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 7.5.2019 முதல் 13.5.2019 வரை

Published On 2019-05-07 03:41 GMT   |   Update On 2019-05-07 03:41 GMT
மே மாதம் 7-ம் தேதியில் இருந்து மே மாதம் 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
7-ந்தேதி (செவ்வாய்) :

* அட்சய திருதியை.
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பொங்கல் விழா, இரவு மின் விளக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

8-ந்தேதி (புதன்) :

* சதுர்த்தி விரதம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார முத்துப் பல்லக்கில் பவனி.
* திருச்செங்காட்டாங்குடி உத்திர பதீஸ்வரர் கோவில் ரத உற்சவம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம், புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதி உலா.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* சமநோக்கு நாள்.

9-ந்தேதி (வியாழன்) :


* ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.
* ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பப் பல்லக்கில் பவனி.
* மாயவரம் கவுரிமாயூரநாதா், திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நயினார்கோவில் நாகநாதா், திருப்புகழுர் மற்றும் திருவாதவூர் தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* மேல்நோக்கு நாள்.

10-ந்தேதி (வெள்ளி) :


* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்.
* மதுரை வீரராகவப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் சன்னிதி தெருவில் ரதத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.



11-ந்தேதி (சனி) :

* மதுரை கூடலழகர் கோவிலில் உற்சவம்.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வருதல்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னைமர வாகனத்தில் வீதி உலா.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள், பின்னங்கிளி வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி இரவு சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத ஊர்வலம்.
* மேல்நோக்கு நாள்.

12-ந்தேதி (ஞாயிறு) :

* காளையார்கோவில் அம்பாள் கதிர்குளித்தல் தபசுக்காட்சி, இரவு சுவாமி வெள்ளி விருட்ச வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி.
* பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் ராம அவதாரக் காட்சி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரதவீதியில் பவனி, இரவு மேற்கு ரத வீதியில் உலா.
* கீழ்நோக்கு நாள்.

13-ந்தேதி (திங்கள்) :

* ஆழ்வார்திருநகரியில் ஒன்பது கருட சேவை.
* திருப்பத்தூர் திருத்தணிநாதர், காளையார்கோவில் சிவன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்.
* மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு அனுமன் வாகனத்திலும் வீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மேற்கு ரத வீதியில் இருந்து நிலைக்கு வருதல்.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News