ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 16.4.2019 முதல் 22.4.2019 வரை

Published On 2019-04-16 03:42 GMT   |   Update On 2019-04-16 03:42 GMT
ஏப்ரல் 16-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
16-ந்தேதி (செவ்வாய்) :

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தங்கச் சப்பரம்.
சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் ரத உற்சவம்.
திருஉத்திரகோசமங்கை தபசு காட்சி.
மதுரை மீனாட்சி திக் விஜயம் செய்தருளல், சுவாமியும் அம்பாளும் இந்திர விமானத்தில் பவனி.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை வேணுகோபாலனாய் காட்சியருளல்.
கீழ்நோக்கு நாள்.

17-ந்தேதி (புதன்) :

முகூர்த்த நாள்.
பிரதோஷம்.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், யானை வாகனத்தில் திருவீதி உலா.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், மதுரை எழுந்தருளல்.
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிவலிங்க பூஜை செய்தருளல்.
மேல்நோக்கு நாள்.

18-ந்தேதி (வியாழன்) :

முகூர்த்த நாள்.
திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாணம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ரத உற்சவம், இரவு சப்தாவரணம்.
திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.
மதுரை கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர்சேவை.
சமநோக்கு நாள்.

19-ந்தேதி (வெள்ளி) :

சித்ரா பவுர்ணமி.
புனித வெள்ளி.
நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
மதுரை கள்ளழகர் மாலை மாற்றி வைகை ஆற்றில் எழுந்தருளல்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருட்ச சேவை.
விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.
சமநோக்கு நாள்.



20-ந்தேதி (சனி) :

காஞ்சி சித்ரகுப்தர் திருக்கல்யாணம்.
திருமலை திருப்பதியில் திருப்படி திருவிழா.
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி, பகலில் கருடரூடராய் மண்டுக மகரிஷிக்கு மோட்சம் அருளல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
சமநோக்கு நாள்.

21-ந்தேதி (ஞாயிறு) :

ஈஸ்டர் திருநாள்.
மதுரை கள்ளழகர் காலை மோகன அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்.
சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் விடையாற்று உற்சவம்.
கீழ்நோக்கு நாள்.

22-ந் தேதி (திங்கள்) :

முகூர்த்த நாள்.
சங்கடஹர சதுர்த்தி.
மதுரை கள்ளழகர் அதிகாலை திருமலைக்கு எழுந்தருளல்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் திருவீதி உலா.
கள்ளக்குறிச்சி கலியப் பெருமாள் ஏகாந்த சேவை.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
சமநோக்கு நாள்.

Tags:    

Similar News