ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 30.10.2018 முதல் 5.11.2018 வரை

Published On 2018-10-30 04:31 GMT   |   Update On 2018-10-30 04:31 GMT
அக்டோபர் 30-ம் தேதியில் இருந்து நவம்பர் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
30-ந்தேதி (செவ்வாய்) :

* தென்காசி உலகம்மை ஆலயத்தில் அம்பாள் பவனி வருதல்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் தவழும் கண்ணன் திருக்கோல அலங்காரம், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.

31-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம், இரவு தங்கக் கிளி வாகனத்தில் பவனி.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (வியாழன்) :

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் மாலை சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (வெள்ளி) :


* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
* திருவிடைமருதூர் பிரகத் குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.



3-ந்தேதி (சனி) :

* ஸ்மார்த்த ஏகாதசி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை தவசுக்குப் புறப்படுதல், இரவு திருக்கல்யாண உற்சவம்.
* தென்காசி, பத்தமடை, சங்கரன்கோவில், வீரவநல்லூர், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய தலங்களில் அம்பாள் திருக்கல்யாண வைபவம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் விருட்ச சேவை.
* கீழ்நோக்கு நாள்.

4-ந்தேதி (ஞாயிறு) :

* வைஷ்ணவ ஏகாதசி.
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் யானை வாகனத்திலும், காந்திமதி அம்மன் புஷ்ப பல்லக்கிலும் பட்டிணப் பிரவேசம், இரவு பல்லக்கு ஊஞ்சல் உற்சவ சேவை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (திங்கள்) :

* பிரதோஷம்.
* முகூர்த்த நாள்.
* மாத சிவராத்திரி.
* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ஊஞ்சல் சேவை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News