ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 4.9.2018 முதல் 10.9.2018 வரை

Published On 2018-09-04 03:48 GMT   |   Update On 2018-09-04 03:48 GMT
செப்டம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
4-ந்தேதி (செவ்வாய்) :

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

5-ந்தேதி (புதன்) :

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி பவனி.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மாலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராம அவதார காட்சி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

6-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் பவனி.
* செருத்துணை நாயனார் குருபூஜ.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை, சேஷ வாகனத்தில் நாராயண திருக்கோலமாக காட்சியருளல்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

7-ந்தேதி (வெள்ளி) :

* பிரதோஷம்.
* அதிபத்த நாயனார், புகழ்துணை நாயனார் குரு பூஜை.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ரங்கநாதர் திருக்கோலமாய் காட்சியளித்தல், மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் ராஜாங்க அலங்கார சேவை.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் காலை தங்க கயிலாய பர்வத வாகனத்தில் புறப்பாடு.
* சகல சிவாலயங்களிலும் மாலை வேளையில் நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.



8-ந்தேதி (சனி) :


* மாத சிவராத்திரி.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் மகா ரதம்.
* இளையான்குடி மாறர் குரு பூஜை.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ராம அவதாரக் காட்சி, மாலை தவழ்ந்த கண்ணன் அலங்காரம், யானை வாகனத்தில் திருவீதி உலா.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

9-ந்தேதி (ஞாயிறு) :

* அமாவாசை.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் தெப்ப உற்சவம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணன், இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கண்ணன் திருக்கோலக் காட்சி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி, மாலை கஜமுக சூரசம்ஹாரம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.

10-ந்தேதி (திங்கள்) :

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி புள்ளின் வாய் கிண்டல், இரவு பரமபத நாதர் திருக்கோல காட்சி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள். 
Tags:    

Similar News