ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 27.3.2018 முதல் 2.4.2018 வரை

Published On 2018-03-27 06:13 GMT   |   Update On 2018-03-27 06:13 GMT
மார்ச் 27-ம் தேதியில் இருந்த ஏப்ரல் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமாக ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
27-ந்தேதி (செவ்வாய்) :

சர்வ ஏகாதசி.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் இரட்டை பரங்கி நாற்காலியில் பவனி.
திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் திருக்கல்யாணம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ரத உற்சவம்.
பழனி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
மேல்நோக்கு நாள்.

28-ந்தேதி (புதன்) :

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார் வருசாபிஷேகம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்பக விமானத்தில் புறப்பாடு கண்டருளல்.
பழனி முருகப்பெருமான் கோவிலில் மாலை தங்க ரதம், இரவு வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா.
திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாண உற்சவம்.
காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல், இரவு அறுபத்து மூவருடன் பவனி.
கீழ்நோக்கு நாள்.

29-ந்தேதி (வியாழன்) :

பெரிய வியாழன்.
பிரதோஷம்.
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தங்க தேரோட்டம்.
கழுகுமலை முருகன், கங்கைகொண்டான் வைகுண்டபதி, திருச்சுழி திருமேனிநாதர் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், தந்த தோளுக்கினியானிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.
பழனி முருகப்பெருமான், ராமகிரி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
சமநோக்கு நாள்.

30-ந்தேதி (வெள்ளி) :


முகூர்த்த நாள்.
பங்குனி உத்திரம்.
புனித வெள்ளி.
திருநெல்வேலி காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.
சகல முருகன் கோவில்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.
மதுரை கள்ளழகர் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்பப்பல்லக்கு.
திருப்புல்லாணி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளி தசாவதாரக் காட்சி.
சமநோக்கு நாள்.



31-ந்தேதி (சனி) :

பவுர்ணமி விரதம்.
திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் இரவு சந்திர பிரபையில் பவனி.
ராமகிரி கல்யாண வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குழி கண்டருளல், ஊஞ்சல் சேவை, இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.
பழனி முருகப்பெருமான் தங்கப் பல்லக்கில் வீதி உலா, இரவு தங்கக் குதிரையில் பவனி.
சமநோக்கு நாள்.

1-ந்தேதி (ஞாயிறு) :


ஈஸ்டர் திருநாள்.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று உற்சவம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், பச்சைக் குதிரையில் பவனி.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
ராமகிரி கல்யாண வேங்கடேசப் பெருமாள் தீர்த்தவாரி.
சமநோக்கு நாள்.

2-ந்தேதி (திங்கள்) :

திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் எண்ணெய்க் காப்பு உற்சவம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேகம், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.
திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் உற்சவம் தொடக்கம்.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்பப் பல்லக்கு.
சமநோக்கு நாள்.
Tags:    

Similar News